أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எவனது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பு அடைகிறாரோ அவரே முஸ்லிம்” என்று நவின்றதாக அபூ மூஸா அல்-அஷாரி ரதியல்லாஹுஅன்ஹு வாயிலாக நாம் அறிகிறோம்.(திர்மிதி, பாகம் 12)

அவன் உண்மையான முஸ்லிம் இல்லை

இந்த ஹதீது ஸய்யிதினா அபூ மூஸா அல்-அஷாரி ரதியல்லாஹுஅன்ஹு வாயிலாக அறிவிக்கப்படுகிறது மேலும் இது ஒரு முஸ்லிம் என்பவர் பிற முஸ்லிம்களுக்கு தனது நாவாலும் தனது கரத்தாலும் துன்பம் தர மாட்டார் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த ஹதீது ஒரு முஸ்லிம் என்பவன் யார் என்பதை விளக்குகிறது மேலும் எந்த நபரிடம் இந்த குணங்கள் உள்ளதோ அவனே முஸ்லிம் என்றும் சொல்லுகிறது. ஆகவே ஒருவனின் நாவாலும் கரத்தாலும் இன்னொருவன் பாதுகாப்பாக இல்லையெனில் அவன் உண்மையில் முஸ்லிம் என்று சொல்லப்பட லாயக்கு இல்லாதவன். எவன் ஒருவன் தொழுவதில்லையோ அவனைப் போலத்தான் இவனும். ஒருவன் தொழாமல் அலட்சியம் காட்டியதற்காக எந்த ஒரு மார்க்கச் சட்ட நிபுணரும் அவன் முஸ்லிம் இல்லை என்கின்ற முடிவுக்கு வர மாட்டார். இருந்தாலும் முஸ்லிம் என்று அழைக்கப்பட அவன் லாயக்கு இல்லாதவன் ஏனெனில் அல்லாஹ்வால் மிகவும் வலியுரதப்படும் ஒரு கடமையை அவன் புறகணிக்கிறான். அதேப்போல் எந்த நபரின் நாவும் கரமும் பிறரை துன்புறுத்துகிறதோ அவன் முஸ்லிம் இல்லை என்று மார்க்கச் சட்ட நிபுணர் கூற முடியாது என்றாலும் இந்த ஹதீத்தின் ஒளியில் அவன் முஸ்லிமாக நடந்து கொள்ளாமல் இருப்பதினால் முஸ்லிம் என்று கூறப்பட அவன் லாயக்கு இல்லாதவன்.

சமூக வாழ்வு என்பது என்ன?

இஸ்லாத்தில் ஐந்து பிரிவுகள் உண்டு:

  • இறை நம்பிக்கை
  • இறைவணக்கம்
  • கொடுக்கல் வாங்கல் அல்லது நடத்தை
  • நற்குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்கள்
  • சம்மூக வாழ்வு

மேல் கூறப்பட்ட ஹதீத்தின் அடிப்படையில்தான் ஐந்தாவது பிரிவு நிற்கிறது, இவ்வுலகில் யாரும் தனியாக வாழ்வதில்லை. தனியாகத்தான் வாழ வேண்டும் என்று யாரும் சொல்வதுமில்லை. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுடன் ஏதோ வகையில் ஒரு பந்தம் இருக்கிறது-அவன் குடும்பம்மாகட்டும், நண்பர்களாகட்டும், அல்லது பிற மனிதர்களாகட்டும், அவர்களிடம் கொடுக்கல் வாங்கலுக்கான பந்தாமாக இருக்கட்டும் அல்லது தன்னுடம் வேலை செல்லும் சக ஊழியர்களாகட்டும். இவர்களுடன் இவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும். இதுவே சமூக வாழ்க்கைக்கான கொள்கை மற்றும் நியதியாகும் மேலும் நமது மார்கத்தின் முக்கிய அங்கமாகும். துரதிஷ்டவசமாக நமது உதாசீனம் மற்றும் பொறுபற்ற போக்கால் இதனை ஒதுக்கி விட்டோம். இதனை மார்கத்தின் ஒரு அங்கமாகவும்கூட நாம் கருதுவதில்லை. இவ்வஷயத்தில் அல்லாஹ் மற்றும் அவனது நபியின் கட்டளைகளின்பால் நாம் கவனம் செலுத்துவதில்லை.

சமூக நியதிகளின் முக்கியத்துவம்

நமக்காக அல்லாஹ் ஸுப்ஹானதாலாஹ் சமூகநியதிகளின் விஷயத்தில் ஒரு தனித்த முக்கியத்துவத்தை அளித்துள்ளான். சமூக வாழ்வியல் சம்பந்தமான விஷயம் ஒன்றை குர்ஆன் எப்படி கையாள்கிறதுஎன்பதை பார்க்கலாம்: ஒருவர் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னாள் அவரின் அனுமதி பெறுவது. அரபியில் அனுமதி பெறுவதற்கு “இஸ்திஜன்” என்று கூறுவர். அல்லாஹ் ஸுப்ஹானதாலாஹ் இஸ்திஜானை விவரிப்பதற்கு இரண்டு ருகூக்களை (பாகங்களை) அருளியுள்ளான். தொழுகையைச் சான்ற கட்டளைகள் அறுபத்தி இரண்டு முறை குர்ஆனில் சொல்லப்படுகிறது ஆனால் எப்படித் தொழ வேண்டும் என்கின்ற முறை நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விடப்பட்டிருக்கிறது. குர்ஆன் தொழும் முறையை விவரிக்கவில்லை. ஆனால் இஸ்திஜானின் விவரங்களை குர்ஆனே விவரிக்கிறது. இதை நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விவரிக்க விடப்படவில்லை. இதிலிருந்தே இதனின் முக்கியத்துவத்தை நம்மால் கணிக்க முடிகிறது. மேலும் ஸுராஹ் ஹுஜுர்ராத்தின் அதிகமான பாகம் சமூக நியதிகளுக்காக அற்பணிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரு புறம் சமூக நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் மறுபுறம் இதனை நாம் தினந்தோற வாழ்க்கையில் புறக்கணித்து விடுகிறோம் மேலும் இதனின் நியதிகளைகூட அறியாமல் இருக்கிறோம்.

சமூக வாழ்க்கைக்கான நியதிகளை மௌலான அஷ்ரஃப் அலி தான்வி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் உயிர்பித்தார்கள்

மௌலான அஷ்ரஃப் அலி தான்வி ரஹீமஹுல்லாஹ் அவர்களின் காலத்தில் அவரைக் கொண்டு அல்லாஹ் ஸுப்ஹானதாலாஹ் எந்த மார்க்க நியதிகளை நாம் பின் தள்ளினோமோ அதனை உயிர்பித்தான். மக்கள் இதனை மார்க்கத்தின் ஒரு அங்கமாக கருத மறந்திருந்தனர். மௌலான அஷ்ரஃப் அலி தான்வி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதன் நியதிகளை போதித்தார். அவருடைய ஃகன்காவில்லேதான் அதற்க்கு ஒரு நடைமுறை வடிவத்தை அவர் கொடுத்தார். அதற்கு முன் ஃகன்கா என்பது ஒரு துறவறமாக இருந்தது: மக்கள் அறைகளில் அல்லாஹ் அல்லாஹ் என்று ஜபித்துக் கொண்டும், திக்ரில் ஈடுபட்டு இபாதத்து செய்து வந்தனர். மௌலான தான்வி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தியதைப் போன்று திக்ரையோ, நஃபில் இபாத்துகலையோ வலியுறுத்தவில்லை. பிறருக்கு துன்பம் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனது சீடர்களுக்கு போதித்தார். அவரின் சீடர்கள் அவர் பரிந்துரைத்த இறைபக்தி பயிற்சிகளை தவறவிட்டால் அவர்களின் தவறுதலுக்காக அவர் பரிதாப்பட்டார் என்றும் ஆனால் அவர்களில் யாராவது சமூக நியதிகளுக்கு மாற்றமாக நடந்து கொண்டதாகவோ, யாருக்காவது துன்பத்தை இழைத்தார் என்று அறிய வந்தாலோ அவரின் மேல் அவருக்கு வெறுப்பு வந்ததாகவும் அவர் கூறுவார்,

முதலில் மனிதனாக மாறு

மௌலான தான்வி ரஹீமஹுல்லாஹ் அடிக்கடி ஒன்றை கூறுவது தெரிந்த விஷயமே, “நீ ஸூஃபியாகவோ துறவியாகவோ வேண்டும் என்று விரும்பினால் அதற்காக என்று நீ நிறைய ஃகன்காவை காணலாம். ஒரு நல்ல மனிதனாக உன்னை நீ மேம்படுத்திக் கொள்ள விரும்பினால், இங்கு நீ வரலாம். அவர்களை இங்கு நாம் வடிவமைப்போம். ஒரு முஸ்லிமாகவோ ஒரு மார்க்க அறிஞராகவோ ஒரு ஸூஃபியாக ஆவதோ என்பது அடுத்த படிநிலை. மேலும் அது ஒரு உயரிய நிலை. நீ முதலில் மனித களத்தில்நுழைந்து விலங்குகளின் வரிசைகளிலிருந்துவெளியே வர வேண்டும். அதை அடைவதற்கு இஸ்லாமிய சமூக வாழ்வின் ஒழுக்க பண்பாடுகளை கற்று அதன்படி நடக்க வேண்டும்”.

மூன்று விதமான விலங்குகள்

அஹ்யா உல் உலூமில், இமாம் கஜ்ஜாலி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ் ஸுப்ஹானதாலாஹ் மூன்று விதமான விலங்குகளை படைத்துள்ளான் என்று கூறியுள்ளார். இதில் ஒரு வகை மனிதனுக்கு பயன்படக்கூடியது. இவை மிகவும் அரிதாகவே மனிதனுக்கு கேடு விளைவிக்கும். இந்த வகையைச் சான்ற விலங்குகளின் உதாரணங்கள் இதோ: ஆடு, மாடு போன்றவை. இவைகள் மனிதனுக்கு பால் கொடுத்து அவனுக்கு பயனளிக்கிறது. அவைகளால் பால் கொடுக்க முடியாவிட்டால், வடம் செய்யப்படுகின்றன. அதாவது மனிதனுக்கு தன உயிரை கொடுத்தும் பயனளிக்கிறது. இந்த விலங்குகள் எவருக்கும் தீங்கிளைப்பதில்லை. இரண்டாவது வகையைச் சார்ந்த விலங்குகள் எப்போதுமே மனிதனுக்கு தீங்கிழைக்கக் கூடியவை. இவைகளால் மனிதர்களுக்கு வெளிப்படையாக எந்த பயனும் இல்லை. இந்த வகையைச் சான்ற விலங்குகளின் உதாரணங்கள் இதோ: பாம்பு, தேள், வேட்டையாடும் விலங்குகள் போன்றவை. இவை தீங்கிழைக்கும் விலங்குகள். மனிதனை அவை கடிக்கும். மூன்றாவது வகை விலங்குகள் மனிதர்களுக்கு பயனும் அளிக்காது தீங்கும் விளைவிக்காது. இவை காட்டில் காண கிடைக்கும். நரி, ஓநாய் போன்றவை இதில் அடங்கும். இவைகளிலிருந்து மனிடஹ்ன் பயனும் பெறுவதில்லை, பெரிதாக தீங்கும் அடைவதில்லை. இந்த அணைத்து வித விலங்குகளை நினைவுப்படுத்தி, இமாம் கஜ்ஜாலி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் மனிதனைப் பார்த்து கூறுகிறார், “மனிதனே! நீ ஒரு சிறந்த படைப்பு. மற்ற விலங்குகள் அனைத்துக்கும் மேலாக உள்ள உனது அந்தஸ்தை நீ அனுபவிக்கிறாய். நீ மனிதனாக நடந்து கொள்ளாமல், விலங்காக வாழ வேண்டும் என்று ஆசைபட்டால், பிறருக்கு பயனளித்து துன்பம் தராமல் இருக்கும் முதல் வகைச் சார்ந்த ஆடு, மாடு போன்ற விலங்குகளை போலாவது வாழத் துணி. இதற்கும் கீழ் உன்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பினால், நன்மையயோ தீமையயோ அளிக்காத மூன்றாவது வகையைப் போல மாறு. இவ்விரண்டு வகை விலங்குகளிலும் சாராமல் பிற மனிதர்களுக்கு பயனளிக்காமல் தீங்கு விளைவித்தால், நீ இரண்டாவது வாயைச் சார்ந்த பாம்பு, தேள் போன்றவைளுடன் உன்னை நீ சேர்த்துக் கொண்டாய்”.

அவர்கள் மனிதர்கள்

ஆகவே ஒருவர் முஸ்லிமா, முஸ்லிம் அல்லாதவரா, மார்க்க அறிஞரா, மார்க்க அறிஞர் அல்லாதவரா, துறவியா, துறவி இல்லையா என்கிற கேள்வி முதலில் முக்கியமானது அல்ல என்பதை நாம் காண்கிறோம். மனிதன் முதலில் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும். அதற்கு அவன் இஸ்லாத்தின் சமூக வாழ்வின்படி நடக்க வேண்டும். அவன் தனது கரத்தாலோ நாவாலோ அல்லது வேறு எந்த வகையிலும் பிறரின் சிரமத்திற்கு சிறு அளவில் கூட காரணமாக இருக்கக் கூடாது. ஒரு முறை மௌலான தான்வி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் தாழ்ந்த மனபோக்குடன் கூறினார், “நானும் ஒரு நேர்த்தியான எந்த குறையும் இல்லாத மனிதன் இல்லை ஆனால் புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கே-நான் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பார்த்திருக்கிறேன். ஆதலால் தன்னை மனிதன் என்று சொல்லிகொள்ளும் ஒரு காளை என்னை ஏமாற்ற முடியாது. எனவே அதன் மேல் இலக்கு வைத்து இன்ஷா அல்லாஹ் ஒரு காளையைப் போல நடந்து கொள்வதில் என்னை நான் ஏமாற்றிக் கொள்ள மாட்டேன்.

மற்ற மனிதர்களை தீங்கிலிருந்து காப்பாற்றுங்கள்

நஃபில் (கட்டாயமற்ற) இபாதத்துகளை பொறுத்தவரை, யாராயினும் அதை செய்ய தவறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது ஆனால் அதை கடைபிடித்தால் மறுமையில் அதற்கான நற்கூலியை பெறுவார். எப்படி இருப்பினும் இவை நற்செயல்கள் ஆகவே ஒருவர் இதைச் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். மறுபுறம், ஒருவர் அனுபவிக்கும் கஷ்டத்துக்கு யாராயினும் காரணமாக இருந்தால், அவர் கடும் பாவத்தை புரிந்துவிட்டார் மேலும் இச்செயலுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவேதான் ஷரிஅத் ஒருவரை கஷ்டத்திலிருந்து விடுவிக்கவோ அதிலிருந்து காக்கவோ நமக்கு வாய்ப்பு கிடைத்தால் நஃபில் இபாதத்துகளை விட்டுவிட சொல்கிறது.

கூட்டுத் தொழுகையின் முக்கியத்துவம்

ஆண்கள் கூட்டாக தொழ வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தப்படுவதை நாம் அறிவோம். இது எவ்வளவு முக்கியம் என்றால், நபி ஸல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், “தொழுகை நேரம் அடைந்தவுடன் நான் யாரையாவது தொழுகையை முன்னடத்த நியமனம் செய்து, நானே ஒவ்வொரு வீட்டிற்க்குச் சென்று அங்கு யாராவது தொழ வராமல் பின்தங்கிவிட்டனரா என்று பார்த்து அவர்களின் வீடுகளை கொழுத்தவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரிக்கின்றனர்”. இது கூட்டுத் தொழுகை எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது. சில மார்க்க அறிஞர்கள், கூட்டுத் தொழுகையை ஸுன்னாஹ் முவக்கதாவாக (கட்டாய ஸுன்னத்-இதனை தொடர்ந்து நிராகரிப்பது பெரும் பாவமாகும்) கருதுகின்றனர். இன்னும் சிலரோ இதற்க்கு வாஜிப் (கட்டாயம்) என்கிற உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கின்றனர்.  கூட்டாக தொழுவது தொழுகையை முழுமையாக்குகிறது மாறாக தனியாக தொழுவது அதை முழுமை படுத்துவதில்லை. நமக்கு நபிகள் நாயகம் ஸல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இன்னும் ஓர் உதாரணமும் உண்டு. நபிகள் நாயகம் ஸல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணத்திற்கு முன் நோய்வாய் பட்டிருக்கும் போது, அவர்களால் எளிதாக நடக்க முடியவில்லை. எனவே அபூபக்கர் சித்தீக் ரதியல்லாஹுஅன்ஹு அவர்களை தொழுகையை முன்னடத்த நியமித்திருந்தனர். அத்தகைய தருணத்திலும் இரண்டு நபர்களின் ஆதரவைக் கொண்டு கூட்டு தொழுகையில் பங்கேற்பதற்காக அவர் மஸ்ஜிதுக்கு வந்தார். இது கூட்டுத் தொழுகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மஸ்ஜிதுக்குள் செல்ல எப்பொழுது ஒருவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

ஒருவர் நோய்வாய்பட்டு இருந்தாலோ, துர்நாற்றத்தோடு இருந்தாலோ அவர் மஸ்ஜிதுக்குச் செல்ல கூடாதென்று மார்க்க சட்ட வல்லுனர்கள் ஒரு சேர முடிவெடுத்துள்ளார்கள். அவர் கூட்டுத் தொழுகைக்கு தூரமாக மட்டும் இருக்கக் கூடாது அதில் சேரகூட அவருக்கு அனுமதியில்லை. அப்படியும் அவர் அதில் சேர்ந்தால், அவர் பாவம் புரிகிறார். அவர் கூட்டுத் தொழுகையில் சேர்ந்தால், தனது துர்நாற்றத்தால் பிறரை அவஸ்தைப் படுத்துவார். மக்களுக்கு அவஸ்தை கொடுக்ககூடியதாக ஒன்று அமைந்தால் கூட்டுத் தொழுகை போன்ற ஒரு முக்கியமான செயலும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை நாம் இங்கு பார்க்க வேண்டும்.

கருங்கல்லை முத்தமிடும்போது பிறருக்கு துன்பம் கொடுத்தல்

ஹஜ்ரே அஸ்வதின் (காபாவில் உள்ள கருங்கல்) முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். கருங்கல்லை முத்தமிடுவது அல்லாஹ்வின் கையை குலுக்குவது போன்றாகும் என்றும் நமது பாவங்களை அது அழிக்கிறது என்றும் நாம் சொல்லப்பட்டிருகிறோம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் தோழர்களும் (ரதியல்லாஹு அன்ஹும்) அதனை முத்தமிட்டார்கள். இதுவும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இப்படி இருந்தும், அந்த கல்லை முத்தமிடும் போது பிற மக்களை தள்ள நேரிட்டால், அவர்களுக்கு துன்பம் விளைவித்தால், அதற்கு முத்தமிடுவது சரியில்லை என்றும், இன்னும் அப்படி செய்வது பாவமென்றும் நாம் அறிவுறதப்படுகிறோம். பிறருக்கு சிறிய அளவில் கூட கஷ்டம் கொடுக்ககூடாது என்பதில் ஷரிஅத் மிகவும் குறிப்பாகவுள்ளது. யாரையும் நாம் துன்புறுத்தி விடுவோம் என்பதற்காக மட்டுமே முக்கிய முக்கிய இபாதத்துகளான கூட்டுத் தொழுகையும், ஹஜ்ரே அஸ்வதை முத்தமிடுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றால், அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், அதற்க்கும் கீழுள்ள நஃபில் இபாதத்துகளையும் நாம் தள்ளிவைத்து விட வேண்டும்.

குர்ஆனை உறக்கமாக ஓதுவது

குர்ஆனை ஓதுவதின் உதாரணத்தையும் நாம் கொடுக்கலாம். இது எப்பேர்பட்ட நல்ல அமல் என்றால் இதை ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓதுபவருக்கு பத்து மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. வேறுவிதமாக சொல்வதென்றால் ஒருவர் குர்ஆனை ஓதுவதால் அவர் நற்கூலிகளை குவிக்கிறார். அணைத்து பக்தி பயிற்சிகளிலும் குர்ஆன் ஓதுவதே மிகச் சிறந்தது. மேலும் உரக்கமாக ஓதுவது இன்னும் விரும்பத்தக்கது. உரக்கமாக ஓதுவது அமைதியாக ஓதுவதை விட அதிக நன்மையை ஈட்டுத் தருகிறது. ஆனால் உறக்கமாக ஓதி அதன் சத்தம் ஒருவரின் தூக்கத்தை கெடுக்கிறது என்றால் உரக்கமாக ஓத அனுமதியில்லை.

நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எப்படி எழுந்தார்

நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்காவாழ்நாளில் க எழுந்தார். அவர் தனது தஹஜ்ஜுத் தொழுகையை ஒரு முறையும் தவறவிட்டதில்லை. நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தஹஜ்ஜுத் தொழுகை கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும் அல்லாஹ்வும் அவனது நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நம்மீது இலகுவாக்கி நமக்கு அதை கட்டாயப்படுத்தவில்லை. அவர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அதை தவறவிட்டதில்லை. இப்படி இருந்தும், எப்போதும் அவர் தஹஜ்ஜூதுக்காக எழும்போது அவருடைய எந்த ஒரு மனைவியின் தூக்கமும் கெடாமல் இருக்க அவர் மிகவும் அமைதியாக எழுவார் மேலும் சிறு அளவில் கூட சத்தத்தை எழுப்பவுமில்லை அல்லது கதவை  கீச்சிட விடவுமில்லை. குர்ஆன்மற்றும் ஹதீத்நம்மை சிறுஅளவில் கூட யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதென்று சொல்கிறது.

நடைபாதையில் தொழுவது

மக்கள் நடமாடும் இடத்தில தொழுவது சரியில்லை. சிலர் இதை கவனத்தில் கொள்வதில்லை. உதாரணத்திற்கு மஸ்ஜிதை எடுத்துக் கொள்ளுங்கள். முன் வரிசைகள் காலியாக இருந்தாலும், சிலர் கடைசி வரிசையை தேர்ந்தெடுத்து அங்கு தொழுவர். இதன் விளைவால் வெளியே செல்பவர்களும் உள்ளே வருபவர்களும் கஷ்டத்தை சந்திக்கின்றனர். அவர்கள் அப்படி தொழுபவர்களை சுற்றிச் செல்கின்றனர் அல்லது அவர்களுக்கு முன்னே நடந்துச் சென்று பாவம் புரிகின்றனர். இப்படி தொழுவது சரியில்லை என்பதுமட்டுமில்லை பாவமும் ஆகும்.

“முஸ்லிமில்” பாதுகாப்பு அடங்கும்

நாம் விவாதித்த ஹதீத்தை இங்கே திரும்பப் பார்க்கலாம். “எவரின் நாவாலும் கரத்தாலும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பு அடைகிறாரோ அவரே முஸ்லிம்”. முஸ்லிம் என்கிற அரபுச் சொல்லின் மூல எழுத்துக்கள் “ஸீன்” “லாம்” “மீம்” ஆகும். இவைகளே பாதுகாப்பு என்கிற சொல்லின் மூல எழுத்துக்களுமாகும். ஆகவே பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் என்கிறச் சொல் முஸ்லிம் என்கிற சொல்லிலும் அடங்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள்

முஸ்லிமல்லாத வேற்று மதத்தின்னர் சந்தித்தால் “ஹலோ” என்றோ “குட் மார்னிங்” என்றோ “நமஸ்தே” என்றோ “ஆதாப்” என்றோ ஒருவருக்கொருவர் வாழ்த்துகின்றனர். அவர்களிடம் வாழ்த்துக்கான பலவாரான சொற்கள் உள்ளது ஆனால் இஸ்லாமிய முறையான வாழ்த்து “உம் மீது சாந்தி உண்டாகட்டும்” என்கின்ற பொருள் கொண்ட “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதாகும். வாழ்த்து போக இந்தச் சொற்கள் வாழத்துபவருக்கு பாதுகாப்புக்காக பிரார்த்தனையை வழங்குகிறது. மற்ற அணைத்து விதமான வாழ்த்துகளும் பிரார்த்தனையை அடக்கவில்லை. வாழ்த்தப்பட்டோர் இதனால் எந்த பயனும் பெறுவதில்லை. ஆனால் ஒரு மனிதன் இன்னொருவரை “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு” என்று வாழ்த்தினால், இதன் பொருளைப் பார்த்தால் அவர் மூன்று நற்பாக்கியங்களுக்காக பிரார்த்திக்கிறார்: உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், மேலும் அல்லாஹ்வின் அருளும் நற்பாக்கியமும். இது ஒரு பிரார்த்தனை மேலும் இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டால் வாழ்த்தப்பட்டவர் தனது வாழ்நாள் முழுவதும் நர்பாக்கியத்தால் பயன் அடைவார். தவிர இந்த வார்த்தைகளைக் கொண்டு வாழ்த்தப்பட்டவர் வாழ்த்துபவரின் கைகளிலிருந்து பாதுகாப்பும் உத்தரவாதமும் பெறுகிறார். இதனால் முன்னவர் பின்னவரிடமிருந்து எந்த துன்பங்களையும் அனுபவிக்க மாட்டார் என்று உறுதி பெறுகிறார். ஒரு முஸ்லிம் இப்படி வாழ்த்துவதிலிருந்து மற்றவருக்கு அவர் சாந்தியையும் அவரை துன்புறுத்த மாட்டார் என்கின்ற செய்தியை கொண்டு வந்ததாக தெரிவிக்கிறார்.

நாவிலிருந்து பாதுகாப்பு என்பதின் பொருள்

இந்த ஹதீத் ஒரு முஸ்லிமை அவரின் நாவாலும் கரத்தாலும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பு அடைகிறார்கள் என்று விளக்குகிறது. நாவால் பாதுகாப்பு அடைவது என்பது மற்றவர்களை சோர்வூட்டும் வகையிலோ, அவருக்கு சிரமம் எற்படுமாரோ அல்லது எந்த வகையிலும் அவரை அதிருப்தியடைய செய்யும் வகையிலோ அவர் எதுவும் சொல்லமாட்டார் என்று திருப்தியடைவதேயாகும்.  அனவே அந்த மனிதர் கண்டிக்கப்படகூடியவராக இருந்தாலும் அவர் மனம் எரிச்சலடையாதவாறே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக அவரின் செயல்கள் சரியில்லை என்றோ, அவரின் நடத்தையை பரிசீலனை செய்ய வேண்டும் என்றோ அவரின் செயல் ஷரியத்துக்கு ஏற்ப இல்லை என்றோ எளிய வகையில் அறிவிக்கப்பட வேண்டும். அவர் சபிக்கப்படவோ குத்தலாக பேசப்படவோ கூடாது. எதையும் மறைமுகமாக ஒருவர் பாதிக்கும்படியாக கூறுவது குத்தலாகும். இது ஆழமான காயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அரபு ஈரடிச் செய்யுள் விளக்குகிறது: வாளால் உண்டாகும் காயம் முன்னோ பின்னோ ஆறிவிடும் ஆனால் நாவினால் காயம் உண்டானால் அது நிரந்தர சுவட்டைப் பொறிக்கிறது.  ஆகவே ஒருவரை தூற்றாமல் அவர் தவறு செய்துவிட்டார் என்று அவரிடம் தெளிவாக கூறுவதே சிறந்தது. குர்ஆன் கூறுகிறது: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹுவுக்கு அஞ்சுங்கள் மேலும் சொல்வதை தெளிவாகச் சொல்லுங்கள்” (அழ-அஹஜாப் 33:70) மறைமுகப் பேச்சு விரும்பப்படுவதாகதோ உகந்ததாகவோ கருதப்படுவதில்லை. இன்றைய காலகட்டத்தில், நாம் பிறழ்ந்த குறிப்புகளுக்கும், சுற்றிவளைத்து பேசும் அணுகுமுறைக்கும் பழகி விட்டோம். இதனால் கேட்பவர் காயமடைகிறார். இவ்வாறு பேசுபவர்கள் மக்களின் பாராட்டை பெறுகின்றனர் மேலும் நல்ல நகைச்சுவை உணர்வுடைய பேச்சாளர் என்று கூறப்படுகின்றனர்.

…………..இன்ஷாஅல்லாஹ் தொடரப்படும்

-Translated from “Discourses on Islamic way of life” by Mufti Taqi Uthmani Sahib (DB). Volume-8


Posts

Pages

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 167 other followers


%d bloggers like this: